உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் மூவயோடைடு[1]
இனங்காட்டிகள்
20758-81-0
InChI
  • InChI=1S/Cf.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: SJKPTAUDVXCUTB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cf+3].[I-].[I-].[I-]
பண்புகள்
CfI3
வாய்ப்பாட்டு எடை 631.71 g·mol−1
தோற்றம் ஆரஞ்சுச்சிவப்பு திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
கொதிநிலை 800 °C (1,470 °F; 1,070 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கலிபோர்னியம்(III) அயோடைடு (Californium(III) iodide) CfI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் இருமக் கனிமச் சேர்மமாக கலிபோர்னியம்(III) அயோடைடு வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

தயாரிப்பு

[தொகு]

கலிபோர்னியம் மூவயோடைடை அதிக வெற்றிடத்தின் கீழ் நுண்ணியகிராம் அளவுகளில் தயாரிக்கலாம். கலிபோர்னியம்(III) ஐதராக்சைடுடன் ஐதரசன் அயோடைடு சேர்த்து 500 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் கலிபோர்னியம்(III) அயோடைடு உருவாகிறது:

Cf(OH)3 + 3HI → CfI3 + 3H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

கலிபோர்னியம்(III) அயோடைடு ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக உருவாகிறது. ~800 ° செல்சியசு வெப்பநிலையில் உருகாமல் நேரடியாக பதங்கமாகிறது. இடக்குழு R3 (No. 148) உடன் a = 758.7 பைக்கோமீட்டர் மற்றும் c = 2081.4 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஓர் அலகுக்கு ஆறு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற முறையில் முக்கோணப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. கலிபோர்னியம்(III) அயோடைடின் படிக அமைப்பு பிசுமத்(III) அயோடைடின் படிக அமைப்பிற்குச் சமமானதாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WebElements Periodic Table » Californium » californium triiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  2. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  3. ERDA Energy Research Abstracts (in ஆங்கிலம்). ERDA Technical Information Center, etc.; Washington. 1977. p. 565. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(III)_அயோடைடு&oldid=3739144" இலிருந்து மீள்விக்கப்பட்டது